ஊட்டியில் கடுமையான உறைபனி - மைனஸ் டிகிரியை நெருங்குவதால் கடுங்குளிர்

  சாரா   | Last Modified : 09 Jan, 2020 10:21 pm
nilgiri-temperature-decreased-by-0-degree-celsius

நீலகிரியில் மிகக் கடுமையான உறைபனி கொட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ச வெப்பநிலை 1 டிகிரி செல்சியசாக குறைந்துள்ளது. சில தினங்களில் ஜீரோ டிகிரியை குளிர் எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.பகல் நேரங்களிலும் கடுமையான குளிரும், மூடுபனியும் நிலவுகிறது. இரவில் உறைபனி கொட்டுகிறது.

                                               

உள்ளூர்வாசிகள், பெரும் கவலையுடன் காணப்படுகின்றனர் காரணம் தேயிலை மற்றும் மலை காய்கறி செடிகளும் கருக துவங்கியுள்ளன. பனியிலிருந்து செடிகள் சுருங்கிப் போவதைக் காக்க வேறு பல செடிகளை வெட்டி எடுத்து வந்து தேயிலைச் செடிகள் மீது போட்டுபாதுகாக்கும் முயற்சிகளில் விவசாயிகள் இறங்கியுள்ளனர். தேயிலைச் செடிகள் தவிர முட்டைகோஸ், கேரட் போன்ற பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close