விரட்டி விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட உணவக உரிமையாளர் - அதிரவைக்கும் பின்னணி..

  முத்து   | Last Modified : 10 Jan, 2020 06:19 am
restaurant-owner-has-been-hacked-to-death

 
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் உணவகம் நடத்தி வருபவர் சுரேஷ். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் உணவகத்தை மூடிவிட்டு அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் கழுத்து மற்றும் தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுரேஷின் சடலத்தை கைப்பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட சுரேஷின் சகோதரர் முருகேஷ் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு உணவகத்தை நடத்தி வந்ததாகவும் அப்போது அவரது மனைவி அந்த உணவகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது. முருகேஷின் மனைவி தற்கொலை செய்து கொண்டதற்கு தாயார் ஜானகிதேவியின் கொடுமைதான் காரணம் என்று முருகேசனின் மனைவியின் சகோதரர் சரவணன் எண்ணியுள்ளார். தங்கையின் இரு குழந்தைகளை அழைத்துச் சென்று இவரே வளர்த்து வருகிறார்.

இதனிடையே கொத்தமங்கலத்தில் உள்ள முருகேசனின் உணவகத்தை அவரது குழந்தைகள் பெயரில் எழுதி வைக்க கூறி அவ்வப்போது சரவணன் பிரச்னையிலும் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் முருகேசன் நிர்வகித்து வந்த அந்த உணவகத்தை அவரது மனைவி இறந்த பிறகு முருகேசனின் சகோதரர் சுரேஷ் உணவகத்தை நிர்வகித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சுரேஷை சரவணன் கொலை செய்தது தெரியவந்தது. விசாரணையில் சரவணன் தனது தந்தை இறந்த பிறகு அவரது தங்கையை மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். அவரே சகோதரிக்கு திருமணமும் செய்து வைத்துள்ளார். இதற்கிடையில் மாமியார் கொடுமை காரணமாக சகோதரி இறந்ததை அடுத்து சகோதரியின் மாமியாரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் இருந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து பட்டுக்கோட்டையைச் சேர்ந்த கூலிப்படையான ராம்கி உள்ளிட்ட இருவரிடம் மாமியார் ஜானகி தேவியை கொலை செய்ய வேண்டும் என்று கூறி 50 ஆயிரம் ரூபாய் பேசி 10 ஆயிரத்தை முன் தொகையாகவும் கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை கொலை செய்த பிறகு பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து சரவணன் வைத்த கூலிப்படையினர் ஜானகி தேவியை கொலை செய்ய முயற்சித்த போது அவர் சிக்கவில்லை.

ஆகவே அவர் மிகுந்த பாசத்துடன் பார்த்து வரும் அவரது இளைய மகனான சுரேஷை கொலை செய்தால், தங்கையை இழந்து தான் தவிப்பது போல் மகனை இழந்து ஜானகிதேவியும் தவிப்பார் என்று எண்ணி கூலிப்படையை வைத்து சுரேஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்தது தெரியவந்தது. இந்தத் தகவல் போலீசார் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கீரமங்கலம் போலீசார் சரவணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கூலிப்படைகளான ராம்கி உள்ளிட்ட சிலரையும் தேடி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close