கள்ளக்காதல்... பட்டப்பகலில் இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய பெரியப்பா..!

  முத்து   | Last Modified : 10 Jan, 2020 08:03 am
dad-attack-on-girl-in-covai

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த வடமதுரை வி.எஸ்.கே நகர் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த 21 வயதான இளம்பெண்ணை, ஒரு வயதான நபர் கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், அந்த நபரை பிடித்து தர்மஅடி கொடுத்து துடியலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனிடையே கத்தியால் தாக்கியதில் அப்பெண் கைகளில் இரு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அப்பெண் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே கத்தியால் தாக்கிய நபரை மீட்டு காவல்துறையினர்  விசாரணை நடத்தினர்.

அப்போது, கத்தியால் குத்திய நபர் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த கட்டிட வேலை செய்து வரும் துரைராஜ் என்பதும், தாக்குதலுக்குள்ளான இளம்பெண் அவரது மனைவியின் அக்காள் மகள் மாது என்பதும் தெரியவந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றுத்திறனாளி ஒருவரை திருமணம் செய்து கொண்ட மாது, பின்னர் மாமியார் கொடுமை செய்வதாகக் கூறி கணவரை விட்டு பிரிந்தார். அதன் பிறகு பெரியப்பா வீடு என்ற முறையில் துரைராஜின் குடும்பத்துடன், அவர்களது வீட்டிலேயே தங்கியும் வந்துள்ளார். மாது பல ஆண் நண்பர்களுடன் நெருங்கி பழகி வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 5 சவரன் நகைகளுடன் மாது மாயமாகியுள்ளார். இதனால் துரைராஜ் மாதுவின் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.  

தாக்குதல் நடத்திவிட்டு போலீசார் அவரை பிடித்தப்போது செல்போனில் பேசிய துரைராஜ், தான் மாதுவை கத்தியால் குத்தி விட்டதாகவும், போலீசார் கைது செய்துள்ளதால் தன்னை பிணையில் எடுக்கும்படி எவ்வித பதட்டமுமின்றி பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close