விவாகரத்துக்குப் பின்னர் இன்னொரு காதல்! ஆத்திரத்தில் தந்தை வெறிச்செயல்!

  முத்து   | Last Modified : 10 Jan, 2020 04:13 pm
driver-attack-love-issue

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் அருகேயுள்ள மாலமேட்டில் வசித்துவருபர் குமார்(30). ஓட்டுநரான இவர் தனது மனைவியுடன் விவாகரத்து பெற்று விட்டு மகளை பராமரித்து வருகிறார். இந்நிலையில், குமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகள் கீர்த்திகாவுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் தந்தை குணசேகரன் பல முறை இருவரையும் கண்டித்துள்ளார். குமார் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் காதலை கைவிட தனது மகளிடம் குணசேகரன் பல முறை எச்சரித்துள்ளார். ஆனால் குமாரும் கீர்த்திகாவும் தங்களது காதலை தொடர்ந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் இரும்பு கம்பியால் குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதையடுத்து குமார் மயக்கமடைந்து விழுந்ததை தொடர்ந்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் குணசேகரனை மடக்கி பிடித்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

இரும்பு கம்பியால் தாக்கபட்டதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட குமாருக்கு தாராபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முதலுதவி செய்து, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close