பூகம்பத்தை ஏற்படுத்திய ஜோசியர்.. மனைவியை அரிவாளால் வெட்டியர் உயிரிழந்த பரிதாபம்..

  முத்து   | Last Modified : 10 Jan, 2020 07:29 am
wife-have-illegal-relationship-husband-tried-kill-wife

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள குலசேகரன் கோட்டை கிராமத்தில் மாரியப்பன் - காளியம்மாள் தம்பதி வசித்து வருகின்றனர். காளியம்மாள் பருத்திக் காட்டில் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல வேலைக்குச் சென்ற நிலையில், கோபத்துடன் அங்கு சென்ற மாரியப்பன், காளியம்மாளை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து மாரியப்பனை தடுத்தனர். பின்னர் படுகாயமடைந்த காளியம்மாளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு வீட்டிற்கு சென்ற மாரியப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனிடையே மாரியப்பனை பிடிக்க வந்த காவல்துறையினர் அவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், புதிய வீடு கட்டுவதற்காக மாரியப்பன் ஜோசியரிடம் சென்றதாகவும், அப்போது ஜோசியர் அவரது மனைவியின் நடத்தை சரியில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் காளியம்மாளைக் கொள்ள முயன்றார் என்றும் அந்த குற்ற உணர்ச்சியில் தானும் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். மேலும், காளியம்மாள் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியதால் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close