க்ரைம் படம் பார்த்து விட்டு தாயை வெட்டி குப்பையில் வீசிய மகன்!

  முத்து   | Last Modified : 10 Jan, 2020 11:55 am
drinks-son-killed-mother

மும்பையின் புறநகர் பகுயில் வசிக்கும் சோஹைல் ஷேக், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மதுவுக்கு அடிமையான இவர் போதிய வருமானம் இல்லாததால் அடிக்கடி தாயாருடன் சண்டையிட்டு வந்துள்ளார். டிசம்பர் 28 இரவு ஷேக் மற்றும் அவரது தாயார் மீண்டும் சண்டையிட்டனர். அப்போது தகராறு முற்றவே ஷேக் தனது தாயாரின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். தாய் உயிரிழந்ததால் அதிர்ச்சியடைந்த அவர் சினிமாவில் வருவது போன்று உடலை துண்டுதுண்டாக வெட்டி கூறுபோட அவர் எண்ணினார். உடனே கூர்மையான ஆயுதங்களால் தனது தாயாரின் உடலை சில துண்டுகளாக நறுக்கி உடல் பாகங்களை தனித்தனியாக அப்புறப்படுத்தினார்.

ஒருநாள் கழித்து அதாவது டிசம்பர் 30 ஆம் தேதி வித்யாவிஹார் பகுதியில் உள்ள கிரோட் சாலையில் தலையில்லாத உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். அடுத்த நாள், இரண்டு நறுக்கப்பட்ட கால்கள், ரெக்ஸின் தாளில் மூடப்பட்டு  புறநகர் காட்கோபரில் ஒரு குப்பை தொட்டியில் கண்டெடுக்கப்பட்டன. ஜனவரி 4 ஆம் தேதி, சாண்டாக்ரூஸ்-செம்பூர் இணைப்பு சாலையில் உள்ள பாலத்தின் அடியில் இருந்து துண்டிக்கப்பட்ட தலையை போலீசார் மீட்டனர். இப்படி ஒரு பெண்ணின் உடல் பாகங்களை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளின் சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்தபோது, மூன்று இடங்களுக்கும் அருகே நிற்கும் ஒரு  இரு சக்கர வாகனத்தை காவல்துறையினர் கவனித்தனர், அதனால் அந்த இரு சக்கர வாகனத்தை வைத்து  ஷேக்கை கைது செய்தனர். ஷேக்கின் சகோதரியிடம்  அவர்களது தாயைப் பற்றி  கேட்டபோது, அவர் சில குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க டெல்லி சென்றதாகக் கூறினார். பின்னர் ஷேக்கை கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் தனது தாயாரை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close