இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை! சில்மிஷம் செய்த இந்து தலைவர் கைது!

  முத்து   | Last Modified : 10 Jan, 2020 04:08 pm
sexual-complaint-against-hindu-organisation

சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பத்தை சேர்ந்தவர் நிரஞ்சனி (40). இவர், கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள அனைத்திந்திய இந்து மகாசபா அமைப்பில் கடந்த 2016ஆண்டு சேர்ந்தேன். இயக்க தலைவர் ஸ்ரீகண்டன் என்ற கோடம்பாக்கம் ஸ்ரீக்கு மொழி பிரச்னை இருப்பதால் டெல்லிக்கு அவருடன் தனியாக சென்று வந்தேன். தொடர்ந்து, எனக்கு 2019 மகாசபா அமைப்பின் மகளிர் அணி மாநில பொதுச்செயலாளர் பதவி கொடுத்தார் பிறகு என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறினார். கடந்த செப்டம்பர் மாதம் என் கையை பிடித்து கட்டியணைத்து, தகாத செயலில் ஈடுபட முயன்றார். நான் தப்பி வந்துவிட்டேன். அவரது செயலால் மகளிர் அணி மாநில பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பினேன். நான் அமைப்பில் சேரவில்லை என்றால் எனது ஆபாச கதைகளை வெளியிடுவேன் என்று மிரட்டினார். எனவே ஸ்ரீகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது புகார் மனுவில் கோரிக்கை விடுத்தார். புகாரின் படி கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீகண்டன் மீது ஐபிசி294 (பி), 354(ஏ),506(1) மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தடுப்பு பிரிவு என 5 பிரிவுகீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதனிடையே, ஸ்ரீகண்டனின் மனைவி நான்சி, நிரஞ்சனி மீது ஆயிரம்விளக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையரிடம் பணமோசடி புகார் அளித்துள்ளார். அதில், நிரஞ்சனி சகோதரர் திருமணத்தை சென்னை -பெங்களூரு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் 20 லட்சம் ரூபாய் செலவு செய்து தனது கணவர் நடத்தி வைத்தார். மேலும் கணவருக்கு போலீஸ் பாதுகாப்பு வாங்கி தருவதாக கூறி 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும் பணத்தை கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 20 லட்சம் ரூபாய் திரும்ப கேட்டதால் பொய்யான புகார் கொடுத்துள்ளார் எனவும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்ரீகண்டனின் மனைவி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close