கடனில் மூழ்கிய அப்பா! காதலனின் எதிர்பாராத செயல்.. மாணவியின் சோக முடிவு..!

  முத்து   | Last Modified : 10 Jan, 2020 10:10 am
teen-girl-commits-suicide-after-her-boyfriend-refused-to-help

தருமபுரியைச் சேர்ந்த ஜெயவேல் என்பவருடைய மகள் லோகேஸ்வரி. இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவருடன் படித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த மாணவருடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. ‌ இந்த நிலையில் இவர்களின் காதலை இவர்களுடைய பெற்றோர் ஏற்றுக் கொண்டதோடு இவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்தனர். கல்லூரி படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாக இவர்களுக்கு வாக்குறுதியும் தந்தனர். ஆனால் லோகேஸ்வரியின் தந்தை ஜெயவேலுக்கு அதிக கடன்கள் இருந்ததால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், இதனால் கல்வி உதவித்தொகை பெற்று யோகேஸ்வரியின் படிப்பைத் தொடர முடிவு செய்தார்.

இந்நிலையில் கல்வி உதவித்தொகை விண்ணப்ப மனு அளிப்பதற்காக கல்லூரிக்கு வருமாறு காதலனை அழைத்ததாகவும், ஆனால் அதற்கு யோகேஸ்வரியின் காதலன் மறுத்ததாகவும் தெரிகிறது. ஏற்கனவே தந்தையின் கடன் பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்த லோகேஸ்வரி தனது காதலன் உதவிக்கு வர மறுத்ததால் மேலும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தான் தங்கியிருந்த தனியார் விடுதியிலேயே தற்கொலை செய்து ‌ கொண்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, லோகேஸ்வரி உண்மையில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? போன்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close