இறந்து விட்டதாக கூறிய மருத்துவர்கள்! இறுதிச் சடங்கின் போது எழுந்து நின்ற அதிசயம்!

  முத்து   | Last Modified : 10 Jan, 2020 12:20 pm
woman-declared-dead-comes-back-to-life-at-funeral-bath

பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் அப்பாஸி ஷாகீத் மருத்துவமனையில் 50 வயதான ரஷீதா பீபீ என்றப் பெண் உடல்நலக் கோளாறால் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், அந்தப் பெண் இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள், அவருக்கு இறப்பு சான்றிதழும் வழங்கியுள்ளனர். அதன்பின்னர், அந்தப்பெண்ணை வீட்டுக்கு எடுத்துவந்த குடும்பத்தினர் அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய ஆரம்பித்தனர். சடங்கின் ஒரு பகுதியாக, அந்தப் பெண்ணை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து குளிப்பாட்டிக் கொண்டிருந்தனர். 

அப்போது, இந்த அறையில் இருந்த பெண் ஒருவர், ரஷீதா பீபீயின் கால் மூட்டுகளில் அசைவு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், ரஷீதாவின் மருமகள் ஷபனாவிடம் கூற, உடனடியாக குடும்பத்தினர், ரஷீதாவின் நாடியைப் பிடித்து பார்த்தனர். அப்போது உயிர் இருப்பதாக இருந்த அறிகுறி தென்பட்டதை அறிந்து, உறைந்து நின்ற குடும்பத்தினர், உடனடியாக ரஷீதா பீபீ சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவருக்கு இறப்பு சான்றிதழ் கொடுக்கப்பட்ட அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close