அமெரிக்கா, ஈரானுக்கு போப் பிரான்சிஸ் அறிவுறுத்தல்!

  சாரா   | Last Modified : 10 Jan, 2020 04:06 pm
pope-francis-about-usa-iran-war

வாடிகனில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், அமெரிக்கா, ஈரான் நாடுகளுக்கிடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டி, இரு நாடுகளும் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக நீண்டகாலமாக மோதல் இருந்து வருகிறது. இதனால் ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா குண்டுவீசி கொன்றதற்கு பதிலடியாக ஈராக்கில் எர்பில் மற்றும் அல்-ஆசாத் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. 

இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இரு நாடுகளும் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று போப் பிரான்சிஸ் அறிவுறுத்தியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close