அரசு அதிகாரிகளுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை! பொங்கல் பண்டிகைக்காக அறிவிப்பு!

  சாரா   | Last Modified : 10 Jan, 2020 11:39 am
9-days-govt-holidays-for-pongal

தமிழகத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்களில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் அனைவருக்கும் இம்மாதம் 11ம் தேதி முதல் 19ம் தேதி வரை பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் பொங்கல் விடுமுறை வரும் நிலையில், அரசு அலுவலகங்களில் பணிப்புரியும் அதிகாரிகளுக்கு மட்டுமே இந்த 9 நாட்கள் தொடர் விடுமுறை பொருந்தும் என்று தமிழக அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் அனைவரும் வழக்கம் போல் பணிக்கு வர வேண்டும் என்றும் அவர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது என்றும் தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடும் நிலையில், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு மட்டும் தொடர் விடுமுறை தினங்களாக 9 நாட்களை அறிவித்து விட்டு, அதே சமயம் அடிப்படை ஊழியர்களும், பணியாளர்களும் வழக்கம் போல் பணிக்கு வர வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது அரசு ஊழியர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close