ரஜினி தமிழகத்துக்கு உதவ வேண்டும்! கமல் திடீர் சர்ச்சை!

  முத்து   | Last Modified : 10 Jan, 2020 11:24 am
kamal-speaks-about-rajini-and-tamilnadu

அரசியல் கட்சி தொடங்கி நடிகர் கமல்ஹாசன் மக்களுடன் பயணிக்க தொடங்கி விட்டார். ஆனால் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என தமிழகம் முழுவதுமே அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வரும் சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்றும், அப்போது புது கட்சி பற்றி அறிவிப்பேன் என்றும் ரஜினி கூறியிருந்தார். சமீபத்தில், `மக்கள் நலனுக்காக தேவைப்பட்டால், அரசியலிலும் நாங்கள் இருவரும் சேர்ந்து பயணிக்கத் தயார்' என கமலும், ரஜினியும் ஒரே குரலில் பேசியிருந்தனர்.

இந்நிலையில், ரஜினியுடன் இணைந்து பயணிப்பது குறித்து மீண்டும் கமல்ஹாசன் பேசியிருக்கிறார் . தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கமலிடம், ரஜினி குறித்து தி இந்து குழுமத் தலைவர் என். ராம் கேள்வி ஒன்று எழுப்பினார். அப்போது பதிலளித்த கமல், `என் நண்பர் ரஜினி, தமிழகத்துக்கு உதவ வேண்டும் என நான் நினைக்கிறேன். ஏனெனில் அது தமிழகம் அவருக்கு உதவி செய்துள்ளது. வேறு எங்கோ பிறந்திருந்தாலும் அவரும் இப்போது தமிழர் தான். அவர் தமிழகத்துக்காக உழைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இதை நான் அவரிடம் வலியுறுத்துவேன். அந்த எண்ணத்தில் தான் அவரும் இருக்கிறார் என கூறினார். 

தமிழகத்தில் திராவிட அரசியல் குறித்துப் பேசிய கமல்,``காலத்தின் தேவையாக எழுந்த திராவிட அரசியல், இன்று தனிநபர்களின் தேவையாக மாறி விட்டது'' என்றார். திராவிட அரசியல் என்ற நோக்கில் தமிழகம் பயணிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று குறிப்பிட்ட அவர், அதை சரியான பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அரசியலில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. அதே போல், எப்படி அரசியல் செய்யக் கூடாது என 1001 வழிகள் இருக்கின்றன. கறுப்புப் பணத்தை இதுவரை என் கைகளால் தொட்டது கூட கிடையாது எனவும் ஊழலை முறைப்படுத்த முடியுமானால், நேர்மையையும் முறைப்படுத்த முடியும் எனவும் கமல்ஹாசன் கூறினார். 

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்திலும், நண்பர் ரஜினி தமிழகத்திற்கு உதவ வேண்டும். ஏனெனில் தமிழகம் அவருக்கு உதவி இருக்கிறது என்றும், ரஜினி பெருமையான தமிழர் தான். அவர் எங்கு பிறந்திருந்தாலும், அவர் பெருமைமிகு தமிழர் தான் என்று பதிவிட்டிருக்கிறார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close