இன்று வருஷத்தின் முதல் சந்திர கிரகணம்! ஏன் ஓநாய் சந்திர கிரகணம் என்றழைக்கிறோம்?

  சாரா   | Last Modified : 10 Jan, 2020 01:14 pm
lunar-eclipse-2020

சூரியனிலிருந்து வெளியாகும் ஒளியை சந்திரன் பெறும் போது, சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவில் பூமி பந்து கடந்து செல்லும் போது, அந்த ஒளி தடைப்படுகிறது. பூமி, சூரியனின் ஒளியைத் தடுப்பதைத் தான் சந்திர கிரகணம் என்கிறோம். 

புது வருஷத்தின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு நிகழ்கிறது. இன்று நிகழ இருக்கும் சந்திர கிரகணத்தை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் முழுவதும் தெரியும் என்றும், இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திர கிரகணத்திற்கு ஓநாய் சந்திர கிரகணம் என்று நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் பெயரிட்டுள்ளது.

பொதுவாகவே சந்திர கிரகணம் உச்சத்தில் இருக்கும் போது, பூமி, 90 சதவீத நிலவை மறைத்து விடும். இதனால் நிலா ஒளி இழந்து காணப்படும்.  இன்று இரவு நிகழ இருக்கும் சந்திர கிரகண காலத்தில், நிலா முற்றாக மறைந்து இருளாகவோ அல்லது சிவப்பு நிறத்திலோ மாறி விடாது என்பதால், இந்த சந்திர கிரகணத்திற்கு ஓநாய் சந்திர கிரகணம் என்று நாசா பெயர் சூட்டியுள்ளது. இந்த வருட இறுதிக்குள் 4 சந்திர கிரகணங்கள் நிகழ இருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது. 

இன்று நிகழ இருக்கும் சந்திர கிரகணத்தை இந்தியாவில் மட்டுமல்லாமல், ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் கிழக்குப் பகுதி, அட்லாண்டிக், ஆர்டிக் பகுதிகளில் இருந்தும் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என்றும் நாசா அறிவித்துள்ளது. 

இன்று இரவு 10.37 மணிக்கு தொடங்கும் இந்த சந்திர கிரகணம், நாளை அதிகாலை 2.42 மணி வரையில், சுமார் 4 மணி நேரம் தொடர்ந்து நீடிக்கும் என்றும், நள்ளிரவு 12.41 மணியளவில் சந்திர கிரகணம் அதன் முழுமையான அளவை எட்டும் என்றும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close