தமிழக கல்லூரிகளுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறை! வெளியான திடீர் அறிவிப்பு!

  சாரா   | Last Modified : 10 Jan, 2020 11:48 am
9-days-holidays-for-tn-colleges

தமிழகத்தில் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் பொங்கல் பண்டிகையையொட்டி  நாளை முதல் இம்மாதம் 19ம் தேதி வரை விடுமுறை அறிவித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல இணை இயக்குனர்களுக்கும் வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குனர் இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு இந்த 9 நாட்கள் விடுமுறையில் பொங்கல் விடுமுறை நாட்களான ஜனவரி 13 மற்றும் ஜனவரி 14 ஆகிய தேதிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திடீர் விடுமுறை அறிவிப்பால் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டிருந்த மாணவர்களுக்கு இந்த தொடர் விடுமுறை அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close