புது சூப்பர் ஸ்டாருக்கு ரூ.162 கோடி கடன்! ஏல நோட்டீஸ் அனுப்பியது பிரபல வங்கி!!

  சாரா   | Last Modified : 10 Jan, 2020 12:20 pm
saravana-stores-debt-recovery

பல பெரிய பெரிய வணிக நிறுவனங்களுக்கு எல்லாம், தங்கள் நிறுவனத்தை எப்படி விளம்பரப்படுத்த வேண்டும், வாடிக்கையாளர்களை எப்படி கவர வேண்டும் என்று பாடம் எடுத்து சாதித்த குடும்பம் பிரபல சரவணா ஸ்டோர்ஸ் குடும்பம். விளம்பர படங்களில் தொடர்ந்து ஹிட்டடித்து வரும் சரவணா ஸ்டோர்ஸின் புது வாரிசு, தற்போது கோடிகளில் பட்ஜெட்டைத் தாண்டும் தமிழ் படத்திலும் ஹீரோவாக அறிமுகமாகி அதிர்ச்சியளிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.

யார் என்ன கிண்டல் செய்தாலும், அதைப் பற்றி எல்லாம் கவலையே படமாட்டேன். என்னுடைய டான்ஸ் மூவ்மெண்ட்களைப் பார்த்து ரசிகர்கள் வாயைப் பிளப்பார்கள் என்று அதிர்ச்சியளிக்கக் காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறார்கள் கரூர் வைஸ்யா வங்கி அதிகாரிகள். 

சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கடையின் விளம்பரதாரர்கள் மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் தங்க மாளிகை மற்றும் அதன் புரோமோட்டர்ஸ்கள் பிரபல கரூர் வைஸ்யா வங்கியிலிருந்து கடனாக ரூ.162 கோடி பெற்றிருந்தார்கள். அந்த ரூ.162 கோடி கடனை இதுவரையில் திருப்பி செலுத்தவில்லை என்று சரவணா ஸ்டோர்ஸ் யோகரத்தினத்தின் மகன் பல்லாகு துரை, அவரது மனைவி சுஜாதா மற்றும் மகன் ஷிரவன் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது கரூர் வைஸ்யா வங்கி.

வங்கி சார்பில், இந்த கடன் விவகாரம் குறித்த அறிவிப்பை பத்திரிக்கைகளிலும் விளம்பரமாக கொடுத்திருக்கிறார்கள். 

அவர்களுக்கு அனுப்பிய கடன் நோட்டீஸில், ரூ.162.80 கோடியை உடனடியாக திருப்பிச் செலுத்துமாறு அறிவித்துள்ளது. அப்படி கடனைத் திருப்பி செலுத்தத் தவறினால், அவர்கள் இந்த கடனுக்காக அடமானம் வைத்திருக்கும் சொத்துக்களை வங்கி கையகப்படுத்த நேரிடும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close