தீவிரவாதிகளால் சுடப்பட்ட எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!

  சாரா   | Last Modified : 10 Jan, 2020 03:01 pm
1-crore-for-si-wilson-family

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்த போது எஸ்.ஐ வில்சனை அவரை இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். 
துப்பாக்கியால் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொன்றவர்களின் புகைப்படங்களையும், சிசிடிவி வீடியோ காட்சிகளையும் வெளியிட்டு போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். 


இந்த துப்பாக்கிச் சூட்டில், எஸ்.ஐ.வில்சனுக்கு தலை, மார்பு, கால் ஆகிய பகுதிகளில் குண்டுகள் பாய்ந்தும் கத்திக்குத்து காயங்களும் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் இறந்த எஸ்.ஐ.வில்சனின் உடலுக்கு காவல் துறையின் உயரதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.

சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் கேரளாவிற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இரு மாநில போலீசாரும் இந்த தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கும் நிலையில், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், அவரது மரணத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close