ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு வரவில்லை! துரைமுருகன்

  சாரா   | Last Modified : 13 Jan, 2020 11:07 am
neet-2020

தமிழக சட்டப்பேரவையில் நேற்று  நீட் தேர்வு தொடர்பான விவாதம்  நடைபெற்ற போது, ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.நீட் தேர்வு என்றாலே தமிழகம் முழுவதும் ஒரு தரப்பினர் அதற்கு ஆதரவு தெரிவித்தும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.குறிப்பாக நீட் தேர்வில் தோல்வி அடைந்து மருத்துவ இடம் கிடைக்காததால் அரியலூரில் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.எனவே நீட் தேர்வால் தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றது.இதனை தொடர்ந்து நீட் தேர்வில் தோல்வி அடைந்த ஒரு சில மாணவர்கள் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்கதையாகி வருகின்றது. மேலும்  நீட் தேர்வால் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

                                                                                             
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நேற்று  நீட் தேர்வு தொடர்பான விவாதம்  நடைபெற்ற போது, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்  மு.க.ஸ்டாலின் பேசுகையில்,நீட் விவகாரத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு நீங்கள் செய்வது மிகப்பெரிய துரோகம் ஆகும் என்று பேசினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய,  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழக அரசின் நிலைப்பாடு துரோகம் என்றால், அந்த துரோகத்திற்கு விதை போட்டது காங்கிரஸ் தான் என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக துரைமுருகன் பேசுகையில், ஜெயலலிதா மிகவும் துணிச்சலானவர். மறைந்த முதமைச்சர்  ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை. அவர் மறைவிற்கு பிறகே நீட் தேர்வு தமிழகத்திற்கு வந்தது என்று  துரைமுருகன் பேசினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close