பள்ளியில் மாணவரை மனித கழிவை அள்ளவைத்த கொடூரம் - ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறை

  முத்து   | Last Modified : 11 Jan, 2020 06:11 am
5-years-jail-for-teacher-in-namakkal

மனித கழிவை பட்டியலின மாணவரை கொண்டு சுத்தம் செய்ய வைத்த ஆசிரியைக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கலில் உள்ள அரசுப் பள்ளியில், கடந்த 2015 ஆம் ஆண்டு, பட்டியலின மாணவர் ஒருவரை, மற்றொரு மாணவரின் கழிவை சுத்தம் செய்ய வைத்ததாக ஆசிரியை விஜயலட்சுமி மீது புகார் எழுந்தது. சிறுவனின் உறவினர்கள் அப்போது பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்த கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியை விஜயலட்சுமியை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்தனர்.

மேலும் மாணவரின் தந்தை, அப்போதைய நாமக்கல் எஸ்.பி. செந்தில் குமாரிடம் புகார் அளித்தார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை நாமக்கலில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், ஆசிரியை மீதான குற்றச்சாட்டு உறுதிச் செய்யப்பட்டதாக நீதிபதி அறிவித்தார். இதனால் ஆசிரியை விஜயலட்சுமிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, ஆசிரியை விஜயலட்சுமி பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close