திமுக ஆதரவு கவுன்சிலர்கள் கடத்த முயற்சி.. பெட்ரோல் குண்டு வீச்சு.. அரிவாள் வெட்டு.. பதற்றம்

  முத்து   | Last Modified : 11 Jan, 2020 12:34 pm
local-body-election-admk-and-dmk-fight

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஒன்றிய சேர்மனுக்கு திமுகவுக்கு ஆதரவாக உள்ள சுயேச்சை கவுன்சிலர்கள் மற்றும் திமுக கவுன்சிலர்கள் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயிருக்கும் புலிகுறிச்சி என்ற பகுதியில் திமுக நிர்வாகி வீட்டில் தங்கியிருந்தனர். ஆனால் நான் தான் வெற்றிபெற வேண்டும் என அதிமுகவின் காளிமுத்து வெறியில் இருந்தார். இதனால் திமுக வசம் உள்ள சுயேச்சைகளை கடத்த அவர் முயற்சி செய்தார். அதன்படி சிவகங்கையில் இருக்கும் சுயேச்சை கவுன்சிலர்களை கடத்த திட்டமிட்ட காளிமுத்து ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் 7க்கும் மேற்பட்ட கார்களில் அவர்கள்  தங்கியிருக்கும் சிவகங்கைக்கு சென்றனர்.

அப்போது, அவர்கள் பெட்ரோல் குண்டு வீசியும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்குதலும் நடத்தினர். பெட்ரோல் குண்டு வீசியதில் 4 கார்கள் சேதமடைந்தன. அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் திமுகவினர் அவர்களை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் சுயேச்சை கவுன்சிலர்களை கடத்தும் முயற்சி தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே இந்த மோதலில் திமுக நிர்வாகிகள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் காயமடைந்த 2 திமுகவினர் உடனடியாக மீட்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்னை தொடர்பாக கமுதி அதிமுக ஒன்றிய செயலாளர் காளிமுத்து உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுக கவுன்சிலர் உள்பட 48 பேர் மீது தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து திமுக கவுன்சிலர்கள் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ராமநாதபுரம் எஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close