ரூ.590 கோடி டெண்டரில் முறைகேடு புகார்.. சிக்கும் அமைச்சர்.. முக்கிய புள்ளிகள்..

  முத்து   | Last Modified : 11 Jan, 2020 06:44 am
the-complained-of-misappropriation-of-tender

சென்னையில் ரூ.300 கோடி ரூபாய் செலவில் 3,800 சாலைகள் அமைப்பதற்காக 48 டெண்டர்களும், ரூ.290 கோடி செலவில் மழைநீர் வடிகால்கள் கட்டுவதற்காக 73 டெண்டர்களும் கடந்த 2018ம் ஆண்டு கோரப்பட்டன. இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யக் கோரியும் அறப்போர் இயக்கத்தின் நிர்வாக அறங்காவலர் ஜெயராம் வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டுள்ளனர். சில ஒப்பந்ததாரர் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. 

டெண்டர் விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் கூறி, 2018 நவம்பரில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்தோம். புகாரின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணையை மேற்கொள்ள அனுமதி கோரி தலைமைச் செயலாளருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை கடிதம் அனுப்பியது.

குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது குறித்தும், தங்கள் விண்ணப்பங்கள் ஏற்கப்படாதது குறித்தும் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள், மாநகராட்சி ஆணையருக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருக்கும் புகார் அளித்துள்ளன. எனவே, எங்களது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் அய்யப்பராஜ் நீதிபதிகளிடம், மனுதாரரின் புகார் தொடர்பாக, 2019 மார்ச் மாதம் ஆரம்பகட்ட விசாரணை பதிவு செய்யப்பட்டு, டிஎஸ்பி சங்கர் தலைமையில் விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரரின் புகார் மீது நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனுவுக்கு லஞ்ச ஒழிப்பு துறையும், சென்னை மாநகராட்சியும் பதில் தர வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பிய புகாரில் அமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை வழக்கில் பிரதிவாதியாக சேர்க்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close