பள்ளி மாணவனை காரில் கடத்தி புதரில் வீசிய மர்ம கும்பல்..

  முத்து   | Last Modified : 11 Jan, 2020 05:50 pm
school-boy-kidnapping-car

சென்னை திருவொற்றியூர் வரதராஜர் தெருவை சேர்ந்தவர்  ஆட்டோ ஓட்டுநர் ஜானகிராமன். இவரது மகன் கிஷோர் (11) கொருக்குப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு பென்சில் வாங்குவதற்காக வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்ற கிஷோர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தப்போது எங்கும் கிடைக்கவில்லை. இந்தநிலையில், காலை 10 மணிக்கு ஜானகிராமன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், கத்திவாக்கம் ரயில்வே நிலையம் அருகே உள்ள புதரில், சிறுவன் ஒருவன் மயங்கிய நிலையில் கிடந்தான். இதை பார்த்த பொதுமக்கள், அவனை மீட்டு முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினர். அவனிடம் விசாரித்தபோது, உங்களது மகன் எனக்கூறி, உங்களது செல்போன் எண்ணை கொடுத்தான், என தெரிவித்தார். 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஜானகிராமன், உடனடியாக ஆட்டோ மூலம் கத்திவாக்கம் ரயில் நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து மகன் கிஷோரை மீட்டு வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர், இதுகுறித்து திருவொற்றியூர் போலீசில் ஜானகிராமன் புகார் செய்தார். போலீசார், மாணவன் கிஷோரிடம் விசாரித்தபோது, வீட்டின் அருகே கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென எனது முகத்தில் மயக்க மருந்து தெளித்தார்கள்.

அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை, என கூறினான். மாணவனை கடத்தியது யார், எதற்காக கடத்தி சென்று பின்னர் புதரில் வீசிவிட்டு சென்றார்கள் என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஆட்டோ ஓட்டுநர் ஜனாகிராமனுக்கு எதிரானவர்கள் இந்த செயலில் ஈடுபட்டனரா? ஆளை மாற்றி கடத்திவிட்டனரா? என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close