பச்சிளம் குழந்தையை பிச்சை எடுக்க வைத்த பெண்.. ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை

  முத்து   | Last Modified : 11 Jan, 2020 10:56 am
collector-has-ordered-the-inclusion-of-a-woman-who-is-begging

வேலூர் மாவட்டம், காட்பாடியில் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு மற்றும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது. அந்த இடத்தில் குழந்தையை வைத்து ஒரு பெண் பிச்சை எடுத்துகொண்டிருந்தார். அவரை அழைத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் விசாரணை செய்த போது அவர் முன்னுக்குப் பின்னாக பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து அந்தக் குழந்தை அவருடையதல்ல எனத் தெரியவந்தது. வாடகைக்கு குழந்தையை எடுத்து வந்த அவர், ஆந்திர மாநிலம் புத்துரை சேர்ந்த மல்லேஸ்வரி என்பதும் வாடகைக்கு குழந்தை எடுத்து வந்து பிச்சை எடுப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் ஆட்சியர் அந்தப் பெண்ணை அரசு காப்பகத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். 

அதையடுத்து காவல்துறை மற்றும் சமூக நலத்துறையின் மூலம் அப்பெண் மற்றும் குழந்தையை வேலூர் அல்லாபுரத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து விசாரணை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பல இடங்களில் இதுபோன்று குழந்தையை வைத்து பிச்சை எடுத்த பெண்களை சமூக நலத்துறையினர் பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்து வருகின்றனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close