#BREAKING சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் தொடர்புடைய 3 பேர் கேரளாவில் சிக்கினர்..

  முத்து   | Last Modified : 11 Jan, 2020 08:40 am
3-person-arrested-police-murder-case

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் (57) துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான சிசிடிவியின் அடிப்படையில் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் தேடப்பட்டு வருகின்றனர். இவர்களை பிடிக்க 10 தனிப்படைகள் மைக்கப்பட்டுள்ளன. கொலையாளிகள் கேரளாவுக்கு தப்பி இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் தமிழக மற்றும் கேரள எல்லை பகுதிகளில் இரு மாநில தனிப்படைகள் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளன.

இதையடுத்து, கேரளாவில் பதுங்கி இருந்த 3 பேரை கேரள தனிப்படை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த செய்யது இப்ராஹிம், அப்பாஸ் ஆகியோரை பாலக்காடு தெற்கு போலீசாரும், பூந்துறையை சேர்ந்த ரபீக் என்பவரை தமிழக தனிப்படை போலீசாரும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் தவுபிக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோருக்கு 3 பேரும் பல்வேறு வகையில் உதவி செய்தது தெரிய வந்துள்ளது.

இவர்களிடம் இருந்து இரு கை துப்பாக்கிகள், இரு வீச்சரிவாள், 4 கத்தி மற்றும் 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இவர்களுடன் வேறு யார் யாருடன் தொடர்பு உள்ளது. இவர்களை இயக்குவது யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close