நடிகைக்கு முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர்! செல்ஃபியால் வந்த விபரீதம்!

  சாரா   | Last Modified : 15 Jan, 2020 01:19 pm
fan-trying-to-kiss-actress-in-public

எப்போதும் மின்னுகிற ப்ளாஷ் வெளிச்சம், புகழ் போதை, கை நிறைய லட்சங்களிலும், சிலருக்கு கோடிகளிலும் பணம், உலகம் முழுவதும் சுற்றி வருகிற வாய்ப்பு என்று நடிகைகளின் ஒரு பக்கத்தை மட்டுமே ரசிகர்கள் தெரிந்து வைத்துக் கொண்டு ரசித்து வருகிறார்கள். நம் நாட்டில் குறிப்பாக பாலிவுட், கோலிவுட், சாண்டல்வுட் என்று  எல்லா மொழிகளிலும் நடிகைகளை ஒரு கண்காட்சிப் பொருளைப் பார்ப்பது போலவே பார்த்து ரசிக்கிறார்கள் ரசிகர்கள்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

ஒரு சிலர், வரம்பு மீறுவதும் உண்டு. பொது இடத்தில் நடிகைகள் படும் துயரங்களை எல்லாம் ஒரு கட்டுரையில் சொல்லி முடிக்கிற ரகம் கிடையாது. சிலர் ஆசையாய் கிள்ளிப் பார்த்து ரசிப்பார்கள். காரில் செல்லும் நடிகைகளுக்கு கைக்குலுக்குகிறேன் பேர்வழி என்று  கைகளை முறித்து விடுகிற முரட்டு ரசிகர்களும் உண்டு. 

அப்படி, பிரபல நடிகர் சயிஃப் அலி கானின் மகளும்,  பாலிவுட் நடிகையுமான சாரா அலி கானும் செல்ஃபி புகைப்படம் எடுக்க வேண்டும் என்று அருகில் வந்து ரசிகர் ஒருவர் திடீரென எதிர்பாராத விதமாம முத்தமிட முயன்றுள்ளார்.

மும்பையின் பிரபல புகைப்படக் கலைஞர் வைரல் பயானி, அவருடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் இச்சம்பவத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ரசிகர்களுடன் இணைந்து சாரா அலி கான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக திடீரென அருகில் வரும் ரசிகர் ஒருவர் சாராவின் கையில் முத்தமிட முயன்றுள்ளார். உடனே அவரை பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினார்கள்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close