ரூ.100க்கு பதிலாக ரூ.500 நோட்டுகள் - ஏடிஎம்மில் குவிந்த பொதுமக்கள்..!

  சாரா   | Last Modified : 12 Jan, 2020 08:11 am
atm-issues-500-instead-of-100

கர்நாடக மாநிலம், மடிகேரி கனரா வங்கி ஏடிஎம்மில் ஒருவர் பணம் எடுத்தார். அப்போது அவருக்கு 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் நோட்டு வந்தது.  இந்த தகவல் காட்டுத்தீயாய் பரவ, கூடுதல் பணம் கிடைக்கிறது என்பதால் ஏ.டி.எம் முன்பு பலர் திரண்டனர். நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுத்துச் சென்றனர்.வங்கி அதிகாரிகள் வருவதற்குள் அதில் இருந்து ரூ.1.75 லட்சத்தை மக்கள் எடுத்து சென்றுள்ளனர். 

இந்த தகவல் கிடைத்த உடனே வங்கி அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தினர். அப்போது பணம் நிரப்பிய தனியார் நிறுவன ஊழியர்கள் ரூ.100 நோட்டுகள் நிரப்ப வேண்டிய இடத்தில் ரூ.500 நோட்டுகளை தவறுதலாக நிரப்பியதால் இந்த கோளாறு ஏற்பட்டதாக தெரிய வந்தது.

பணம் எடுத்து சென்றவர்களிடம் பணத்தை திரும்ப பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close