முகம் சிதைக்கப்பட்டு கொடூர கொலை.. பைக் சாவி யாருடையது..? போலீஸ் திணறல்

  முத்து   | Last Modified : 12 Jan, 2020 07:23 am
man-got-murder-near-nagercoil

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள வட்டவிளை என்ற இடத்தில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத தனியார் தோட்டம் ஒன்று உள்ளது. அப்பகுதி மதுப்பிரியர்களின் கூடாரமாக இருக்கிறது. அங்கு எப்போதும் பெண்கள், குழந்தைகள் செல்லமுடியாத சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலை மற்றும் முகத்தில் கல்லால் கடுமையாக தாக்கப்பட்டு இறந்துகிடந்தார்.

அவ்வழியே சென்ற சிலர் இதைப்பார்த்து, காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கொலை செய்யப்பட்டு கிடந்த நபரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட நபர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது இதுவரை தெரியவில்லை. கொலை செய்யப்பட்டிருந்த இடத்தில் இருசக்கர வாகனத்தின் சாவி ஒன்று கிடந்தது. அந்த சாவியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close