தனிமையில் உல்லாசம்! திருமணத்திற்கு மறுத்ததால் கொலை செய்து சரண்டரான காதலன்!

  முத்து   | Last Modified : 13 Jan, 2020 11:21 am
girl-killed-her-lover

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்தவர் முகமது ஷாஹித். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஹரதி என்பவரும் கல்லூரியில் நண்பர்களாக வலம் வந்துள்ளனர். காலப்போக்கில் இருக்கும் நட்பு காதலாக மலர்ந்துள்ளது. இதனால் ஷாஹித்தின் வீட்டிற்கு ஹரதி அடிக்கடி போவதை வழக்கமாக வைத்துள்ளார். இருவரது வீட்டிலும் இவர்களது காதல் தெரிய வந்ததால் ஹரதியின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதற்கு ஹரதி சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த ஷாஹித் எப்படியாவது காதலியை கரம் பிடிக்க போராடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தனியாக பேச வேண்டும் என ஹரதியை வீட்டிற்கு அழைத்து சென்றார் ஷாஹித்.

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து பிளேடால் ஹரதியின் கழுத்தை அறுத்து விட்டார். இதில் ரத்தம் அதிகளவு கொட்டி அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே ஷாஹித் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மத்திய சிறைக்குச் சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் காதலியை கொன்று விட்டேன், சிறையில் அடையுங்கள் என கோரியுள்ளான்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறைத்துறை அதிகாரிகள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் ஹரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல் துறையினர் ஷாஹித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close