ஒரு தலைக்காதல்! பெண்ணின் கல்யாணத்தை விபரீத செயலால் நிறுத்திய காதலன்!

  முத்து   | Last Modified : 13 Jan, 2020 11:13 am
youth-arrested-for-posting-fake-account-on-facebook

22 வயது இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக்கில் போலி கணக்கை தொடங்கி இளம் பெண்ணை குறித்து ஆபாச பதிவுகள் வெளியிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூர் மாவட்டத்தில் பிரசாந்த் ராஜக் என்னும் 22 வயது இளைஞர் ஒருவர் 27 வயது இளம் பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்துள்ளார். பின்னர் அவரிடம் சென்று தன்னை திருமணம் செய்துக் கொள்ளும் படியும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது.

அதன்பிறகு தொலைப்பேசி வாயிலாக அடிக்கடி தொந்தரவு செய்து வந்த ராஜக் ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை பழிவாங்க திட்டமிட்டார். அதன்படி ஆத்திரத்தில் இருந்த பிரசாந்த் ராஜக், சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் அந்த இளம்பெண்ணின் பெயரிலேயே கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். மேலும் அந்த ஃபேஸ்புக் கணக்கில் அந்த பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து, ஆபாச பதிவுகளை வெளியுட்டுள்ளார். இதனை அறிந்த அந்தப் பெண் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், போலீசார் பிரசாந்த் ராஜக்கை கைது செய்து விசாரணையை நடத்தினர். அப்போது தான் ஒரு தலையாக காதலித்து வந்த பெண், வேறு ஒருவரை திருமணம் செய்ய இருப்பதால், அந்த பெண்ணுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி திருமணத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். இதனால் பிரசாந்தின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close