மதுரையில் வீட்டு சுவர் அண்ணன், தங்கை பலியான சோகம்!

  முத்து   | Last Modified : 13 Jan, 2020 11:12 am
melur-two-childrens-died-accidently-crashed-home-wall

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நாவினிபட்டியை சேர்ந்த பிரேம்குமார், ஜீவா தம்பதியினருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இதில் 5 வயதான மகா விஷ்ணு, 3 வயதான அஜிஸ்ரீ என்ற தனது தங்கையுடன் அதே பகுதியில் உள்ள செந்தில் என்பவரின் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த வீட்டின் சுவர் மிகவும் அபாயகரமான வகையில் நின்றதால் அப்பகுதி மக்கள் அச்ச உணர்வுடனே கடந்து செல்வர்.

ஆனால் ஆபத்தை உணராமல் அந்த சுவரின் அருகில் இரண்டு சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக செந்தில் வீட்டு சுவரானது இடிந்து இரு குழந்தைகள் மீதும் விழுந்தது. சுவரில் சிக்கிக் கொண்ட சிறுவர்கள் அலறியதை கண்டு, அருகில் இருந்தவர்கள் மீட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருண்டு குழந்தைகளும் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிராமத்தில் அண்ணன் தங்கை சுவர் இடிந்து உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close