செல்போனில் காதலனுடன் விளையாட்டு! பரிதாபமாக உயிரிழந்த காதலி!

  முத்து   | Last Modified : 15 Jan, 2020 01:14 pm
teenager-commits-suicide-on-live-video-chat

கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் பீருமேடில் கூலி தொழில் செய்யும் தம்பதியரின் 19 வயது மகள் அவர்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதப் போது தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதனை கண்ட பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் அடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் அவரது தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இளம்பெண்ணின்  காதலரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது விளையாட்டு விபரிதமானது தெரிய வந்துள்ளது. அதாவது சம்பவத்தன்று இளம்பெண்ணும் அவரது காதலனும் செல்போனில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் தான் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக இளம்பெண் காதலனுக்கு மிரட்டல் விடுத்தார். கயிறு கட்டி விளையாட்டாக மிரட்டல் விடுத்தப் போது எதிர்பாராத விதமாக கழுத்தில் மாட்டியிருந்த கயிறு இறுகியது. இதில் அப்பெண் உயிரிழந்தது தெரிய வந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close