பட்டப்பகலில் இளைஞரை விரட்டிய கும்பல்.. காப்பாற்ற வந்த போலீஸுக்கும் அருவாள் வெட்டு!

  முத்து   | Last Modified : 13 Jan, 2020 10:37 am
the-mob-attacked-the-police

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கள்ளுக்கடை மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (29). அங்கு உள்ள பூக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர், பஜார் பகுதியில் சென்றப்போது, திடீரென அங்கு ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ராஜேஷை சுற்றி வளைத்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உயிர் பிழைக்க அங்கிருந்து தப்பியோடினார். ஆனால், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பின்தொடர்து துரத்தி சென்று ராஜேஷை மறித்து கத்தியால் வெட்டினர். இதில் காயமடைந்த அவர் மீண்டும் ஓடினார்.

இது தொடர்பாக தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீஸ்காரர் ரஞ்சித் கும்பலிடம் சிக்கியிருந்த ராஜேஷை மீட்க முயன்றார். அப்போது, அவரையும் அந்த கும்பல் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதில் காயம் அடைந்த போலீஸ்காரர் ரஞ்சித் மற்றும் ராஜேஷ் ஆகியோரை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது தொடர்பான விசாரணையில், தாமரை ஏரிக்குளம் பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவருக்கும், வெட்டுப்பட்ட ராஜேஷ்க்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் அவரை வெட்டி கொல்ல அந்த கும்பல் முயற்சித்தது தெரியவந்தது. இதையடுத்து முனுசாமி உள்பட 6 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பட்ட பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close