வீதியில் குழந்தைகளுக்கான இசை நிகழ்ச்சி! சென்னையில் களை கட்டும் பொங்கல் கொண்டாட்டம்!

  சாரா   | Last Modified : 13 Jan, 2020 12:02 pm
pongal-celebrations-in-t-nagar

தமிழகம் முழுவதுமே பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதில் அனைவரும் முனைப்பு காட்டி வருகிறார்கள். வழக்கமாக இது போன்ற பண்டிகை நாட்களில் சென்னை வெறிச்சோடி காணப்படும். எப்போதும் பரபரப்பான சென்னை, சொந்த ஊரை நோக்கி படையெடுக்கும் மக்களால் களையிழந்து வெறிச்சோடியபடியே அவர்கள் சென்னைக்கு திரும்பும் வரையில் காத்திருக்கும்.

இந்த வருடம் புது முயற்சியாய், பரபரப்பான தி.நகர் பாண்டி பஜார் சாலைகளில் 'ழா' மற்றும் 'நம் வீடு நம் ஊர் நம் கதை' அமைப்புகள் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். ஜனசந்தடி மிக்க சாலைகளில் பயணிப்பவர்கள், கொஞ்சம் வாகனங்களை நிறுத்தி, நின்று ரசித்துச் செல்கிறார்கள். நீங்கள் சென்னைவாசியாக இருந்தால், நிச்சயமாக உங்கள் குழந்தைகளுடன் கண்டுக் களிக்க வேண்டிய இசை நிகழ்ச்சி. மிஸ் பண்ணாம, உங்க குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பையும், அனுபவத்தையும் கொடுங்க!

குழந்தைகளுக்கான ரைம்ஸ், லயன்கிங் பாடல் என களைகட்டுகிறது கச்சேரி.  பாண்டிபஜாரைத் தொடர்ந்து நகரின் முக்கிய இடங்களில் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். உங்க ஏரியாவில் நடத்த விரும்பினால், கமெண்ட் பாக்ஸில் தகவல் தாங்க.. இந்த புது முயற்சியை அடுத்த சந்தடியினருக்கும் கடத்து, அவர்களையும் இசையால் வாழ வைப்போம்!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close