#BREAKING: சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி விளக்கம்! 

  சாரா   | Last Modified : 13 Jan, 2020 12:01 pm
sabarimala-darshan-judgement

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் இதுநாள் வரையில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதில்லை என்ற நடைமுறை வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த வழக்கத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 60க்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இந்த மேல்முறையீட்டு வழக்கை 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது.  தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வில், இந்த  மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று, தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்களை விசாரிக்கப்போவதில்லை என விளக்கம் அளித்துள்ளது. 

‘சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாமா என்பது மட்டும் அல்லாது கோயில் மற்றும் மசூதிகளிலும் பெண்கள் நுழைவது வழிபாட்டு முறைகளுடன் தொடர்புடைய விஷயமா எனவும் விசாரிக்க உள்ளோம். தீர்ப்பை எதிர்த்து  தாக்கல் செய்யப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் குறித்து விசாரிக்க போவதில்லை’ என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close