எஸ்.ஐ.வில்சனை கொலையில் திடீர் திருப்பம்! கேரள போலீசார் விசாரணை!

  சாரா   | Last Modified : 13 Jan, 2020 12:25 pm
si-wilson-murder-case-keral-police-enquiry

களியக்காவிளை சோதனைச் சாவடியில், கடந்த 8ம் தேதி இரவு பணியிலிருந்த எஸ்.ஐ.வில்சனை இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொன்ற வழக்கில் நாளுக்கு நாள் அதிரடியான தகவல்கள் வெளிவந்த நிலையில் உள்ளன. துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதோடு மட்டுமல்லாமல், கத்தியால் எஸ்.ஐ.வில்சனைக் குத்தியிருப்பதும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. 

இது தொடர்பாக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, தவுபீக், ஷமீம் என்ற இளைஞர்களைக் கைது செய்தனர். இவர்கள் இருவரும் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொன்று விட்டு, அருகில் இருந்த பள்ளிவாசல் வழியாக தப்பிச் சென்றது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது. மேலும், கேரள எல்லைப் பகுதிகளில்  இருந்த ரகசிய கேமராக்களில், குற்றவாளிகள் இருவரும் நெய்யாற்றின் வழியாக கேரளாவுக்கு நடந்துச் சென்றதும் கேமிராவில் பதிவாகியிருந்தது. 

இந்நிலையில், அவர்கள் இருவரும் எஸ்ஐ வில்சனை எதிர்பாராத விதமாக கொல்லவில்லை என்றும், வில்சனைக் கொலைச் செய்வதற்காக இரண்டு தினங்கள் தனியே திட்டம் தீட்டியிருப்பதும் தெரிய வந்துள்ளது.  நெய்யாற்றங்கரை பகுதியில் தங்கியிருந்த அவர்கள் இருவரும், இரண்டு தினங்களாக அங்கே இருந்த மசூதிக்கு வந்து சென்றுள்ளனர். கொலைச் செய்த அன்று, முழு கடையடைப்பு என்பதால், 400 ரூபாய் கொடுத்து அவர்கள் இருவரும் ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தியிருப்பதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close