சீறிப் பாயும் ஜல்லிக்கட்டு போட்டிகள்! கழுகு போல் கண்காணிக்க நல வாரியம் அதிரடி!

  சாரா   | Last Modified : 13 Jan, 2020 01:37 pm
jallikattu-spl

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலகலாமாக துவங்க இருக்கிறது. உலகம் முழுவதும் இருந்தும் பல ஆயிரக்கணக்கானவர்கள் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் கண்டு ரசிக்க தமிழகத்தை நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது.


தமிழகம் முழுவதும் ஜனவரி 15ம் தேதி தைத் திருநாள் கொண்டாடப்படுகிறது.பொங்கல் அன்று அவரவர் சொந்த ஊர்களில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பொங்கல் சிறப்பு என்றால் அதனோடு மங்காத வீரத்தினை எடுத்துரைக்கும் ஜல்லிக்கட்டு மற்றொரு சிறப்பாகும்.

அன்று சீறிப்பாயும் காளைகளும், அதனை அடக்க சீறிப் பாயும் இளங்காளையர்களுமாக தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி நடைப்பெறும் இடங்களில், தமிழகமே ஜே ஜே என்ற கரகோஷத்திற்கு பஞ்சமிருக்காது. ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனுமதியை தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உறுதிப்படுத்திய நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதற்கான  வேலைகள்  கனஜோராக நடைப்பெற்று வருகிறது. 

                                                      


இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை எல்லாம் கண்காணிக்க இந்திய விலங்குகள் நல வாரியம் குழு ஒன்றை அமைத்துள்ளது.அதன்படி கால்நடை வளர்ப்புத் துறையின் முன்னாள் கூடுதல் இயக்குநராக பணியாற்றிய ரவீந்திரன் தலைமையில் 15 பேர் கொண்ட குழு ஒன்று, இந்த போட்டிகளைக் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளது. வீரவிளையாட்டு மீட்புக் கழகத்தின் மாநில செயலாளர் ராஜேஷ் உட்பட 14 பேர்  இந்த குழுவின் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close