பாஜக தலைவர் பட்டியலில் நானும் இருக்கிறேன்! எஸ்.வி.சேகர் காமெடி!

  சாரா   | Last Modified : 13 Jan, 2020 01:42 pm
sve-shekhar

பாஜக கட்சியை சேர்ந்த திரை பிரபலம் எஸ்.வி.சேகர், அவரது பிறந்த நாளையொட்டி, திருக்கடையூரில் குடும்பத்தாருடன் தரிசனம் செய்து விட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தமிழக பாஜக கட்சியை சேர்ந்த சேர்ந்தவரும் திரைப்படப் பிரபலமான எஸ்.வி.சேகர்,  அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சென்று குடும்பத்தாருடன் தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அந்த பேட்டியில் பல அரசியல் கருத்துக்களை தெரிவித்தார்.

                                                       


‘தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து திமுகவினர் தவறான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சட்டமானது இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்றும், சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் அவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிதி அளித்துள்ளதற்கு தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றும் கூறினார்.


பிரதமர் மோடி திட்டங்கள் குறித்து தமிழக பாஜகவினர் தமிழகத்தில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த தவறி விட்டனர் எனவும், தான் தமிழக பாஜக புதிய தலைவராக நியமிக்கப்பட்டால் சிறப்பாக செயல்படுவேன். தமிழக பாஜக தலைவர் பட்டியல் பெயரில் தனது பெயரும் உள்ளது.’ என்றும் நிருபர்கள் மத்தியில், காமெடி செய்தார். எப்படி ஆண்டாள் விஷயத்தினால் வைரமுத்துவிற்கு கிடைக்ககூடிய  மத்திய அரசின் விருதுகளும், கெளரவ டாக்டர் பட்டமும் பறிபோனதோ அதைப் போலவே எஸ்.வி.சேகரின் வாய்துடுக்குத் தனத்தினால், பாஜக கட்சியினரிடையே பெரிய மரியாதை இல்லை. இருந்தாலும், ஆட்டத்தில் நானும் இருக்கிறேன் என்று அவ்வப்போது எஸ்.வி.சேகர் கருத்துக்களைச் சொல்லி வருகிறார். இவரையெல்லாம் தமிழக பாஜக தலைவராக நியமிக்கும் அளவிற்கு பாஜக தரம் தாழ்ந்து விடவில்லை என்று எஸ்.வி.சேகர் சொன்ன அடுத்த விநாடியே அங்கேயிருந்த பாஜக தொண்டர்கள் கருத்து தெரிவித்தது தனி ரகம்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close