தமிழகத்தில் இந்த 7 இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி!

  சாரா   | Last Modified : 13 Jan, 2020 12:54 pm
jallikattu-in-7-places

பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தில் நடைப்பெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பார்வையிட உலகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் மதுரை, கரூர், திருச்சி மாவட்டங்களிலுள்ள 7 இடங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதியளித்து அரசிதழில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து அரசிதழில் தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 1960ம் ஆண்டு விலங்குகள் கொடுமைப்படுத்துதல் தடுப்பு சட்ட 2வது பிரிவில், 2017ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் வரும் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா ராச்சாண்டார் திருமலை கிராமத்திலும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா பாலமேடு, அலங்காநல்லூர், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா சூரியூர், மருங்காபூரி தாலுகா ஆவாரங்காடு, மணப்பாறை தாலுகா பூதமெட்டுபட்டி, கருங்குளம் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close