கூட்டணி குறித்து பேசக்கூடாது! ஓபிஎஸ், ஈபிஸ் அதிரடி உத்தரவு!

  சாரா   | Last Modified : 13 Jan, 2020 01:43 pm
eps-ops-instructions-to-party-members

அதிமுகவின் கூட்டணி விவகாரங்கள் குறித்து தனிப்பட்ட கருத்துகளை ஊடகங்களுக்கு அதிமுக நிர்வாகிகள் பேட்டி தரக் கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பாஜகவுடனான கூட்டணி குறித்து அதிமுகவின் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா விமர்சன கருத்துகளை தெரிவித்து வந்தார். மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தால் இஸ்லாமியர்கள் தங்களுக்கு எதிராக இருப்பதாகவும் அன்வர் ராஜா கூறியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
                                                               

இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருவரும் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், அதிமுகவின் கூட்டணி நிலை குறித்து சிலர் தங்களது தனிப்பட்ட கருத்துகள், பார்வைகளை பொதுவெளியில் பேட்டிகள் என்ற பெயரில் ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close