விரைவில் மீண்டு வருவேன்! விஜயகாந்த் உருக்கமான பேச்சு!

  சாரா   | Last Modified : 13 Jan, 2020 02:19 pm
captain-vijaykanth-speech

தொண்டர்களே எனது முதல் கடவுள் என்றும் மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் மீண்டு வருவேன் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் உருக்கமான பேசியது அவரது கட்சியின் தொண்டர்களையும், ரசிகர்களையும் நெகிழச் செய்துள்ளது.

சென்னை கொரட்டூரில் தேமுதிக சார்பிலான பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. அப்போது 101 பானைகளில் பொதுமக்களுடன் இணைந்து பொங்கல் வைக்கும் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று பொங்கல் பரிசுகளை வழங்கினர். இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசும் போது, தான் விரைவில் மீண்டு வருவேன் என்றும், தொண்டர்கள் தான் தனது முதல் கடவுள் என்றும் உருக்கமாக பேசியது, அங்கே குழுமியிருந்த அவரது தொண்டர்களையும், ரசிகர்களையும் உணர்ச்சியடையச் செய்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close