செட்டிநாடு அறக்கட்டளை குதிரைகள் ரேஸில் பங்கேற்கலாம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

  சாரா   | Last Modified : 14 Jan, 2020 03:31 pm
chettinad-trust-horses-can-participate-in-race

தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமிக்கு சொந்தமான செட்டிநாடு அறக்கட்டளையைச் சேர்ந்த குதிரைகளை, குதிரைப் பந்தயங்களில் பங்கேற்க செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் குதிரை பந்தயங்கள் நடந்து வருவது வாடிக்கையானது. இதில், பங்கேற்கும் குதிரைகளின் உரிமையாளர்கள் தங்களின் பெயரையும், அவர்கள் பராமரித்து வரும் குதிரைகளின் விவரங்களையும் மெட்ராஸ் ரேஸ்  கிளப் நிர்வாகத்திடம் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில், மறைந்த எம்ஏஎம். ராமசாமியின் செட்டிநாடு அறக்கட்டளைக்கு சொந்தமான குதிரைகளை பதிவு செய்வதற்காக மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது.

ஆனால், அறக்கட்டளை குதிரைகளை பந்தயங்களில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என்று மறுத்து, ரேஸ் கிளப் நிர்வாகம் கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

ரேஸ் க்ளப் நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து செட்டிநாடு அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், குதிரையின் உரிமையாளராக அறக்கட்டளை இருக்க முடியாது என்ற ரேஸ் கிளப்பின் வாதத்தை ஏற்க மறுத்து, செட்டிநாடு அறக்கட்டளைக்கு சொந்தமான குதிரைகளை, உரிய கட்டணங்கள் செலுத்தச் செய்து 2020-21ம் ஆண்டு நடக்கும் பந்தயங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இது தவிர, அறக்கட்டளை குதிரைகளுக்கு எம்ஏஎம். ராமசாமிக்கு ஒதுக்கப்பட்ட வண்ணத் துணியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close