டிக்டாக் வீடியோவை விட இந்த ஆஃப் செமயா இருக்கு! பேஸ்புக்கின் அதிரடி!!

  சாரா   | Last Modified : 15 Jan, 2020 12:35 pm
facebook-s-lasso-to-soon-take-on-tiktok-in-india

டிக்டாக் செயலி அறிமுகமான காலத்தில் இருந்தே அதன் பயனாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. தற்போது டிக்டாக் செயலியை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் டிக்டாக் செயலிக்கு போட்டியாக லஸ்ஸோ என்ற செயலியை அறிமுகம் செய்திருந்தது. குறிப்பாக அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்ட இந்த லஸ்ஸோ செயலி இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் இந்தியாவிலும் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த லஸ்ஸோ செயலியை வாட்ஸ்ஆப் செயலியுடன் ஒருங்கிணைக்கும் பணிகளில் பேஸ்புக் நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செயலி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் டிக்டாக் செயலிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

                                    


கடந்த ஆண்டு அக்டோபர் முதல் சிங்கப்பூரில் உள்ள ஃபேஸ்புக் குழு ஒன்று இந்திய வெளியீட்டிற்கு லஸ்ஸோ செயலியை தயார்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்பு இந்த டிக்டாக் வளர்ச்சிக்கு காரணமாக விளங்கியவற்றை அறிந்து கொள்ள பேஸ்புக் நிறுவனம் மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் உதவியுடன் ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் டிக்டாக் செயலிக்கு போட்டியை ஏற்படுத்தும் நோக்கில், லஸ்ஸோ சேவையில் இணைந்து கொள்ள கிரியேட்டர்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் பேச்சுவாரத்தையில் ஈடுபட லஸ்ஸோ சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட லஸ்ஸோ செயலி கூகுள் பிளே ஸ்டோரில் பல லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். அதேசமயம் லஸ்ஸோ செயலியை இந்திய தவிர இந்தோனிசியா போன்ற வளரும் சந்தைகளிலும் வெளியிட பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close