அரசியல்வாதிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! விஜய் தந்தை எஸ்.ஏ.சி. எச்சரிக்கை!

  சாரா   | Last Modified : 15 Jan, 2020 12:27 pm
vijay-dad-advise-to-politicians

மக்களிடம் அதிக விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருவதால் அரசியல்வாதிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று இயக்குனரும் விஜய் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஜய் மன்ற அலுவலகத்தைத் திறந்து வைத்து பேசிய நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான  எஸ்.ஏ.சந்திரசேகர் மக்களிடம் அதிக விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருவதால் அரசியலை வியாபாரமாக செய்யாதீர்கள் என்று தெரிவித்தார்.

                                            


அரசியல்வாதிகள் பணம் மற்றும் இலவச பொருட்கள் கொடுத்தால் ஜெயித்து விடலாம் என்ற எண்ணம் தற்போது மாறிக் கொண்டே வருகின்றது. அதனால் இனி மக்களிடம் அரசியல்வாதிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்ததுடன், மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் இனிமேல் வெற்றியடைய முடியும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த நான்கு, ஐந்து வருடமாக திரைப்படத்துறை அழிவை நோக்கி மிக மோசமாக சென்று கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் சரியாக செயல்படுகின்றனவா என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது என்று குற்றம் சாட்டினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close