தஞ்சையில், இளம்பெண்ணை கூட்டாக கற்பழித்த வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி!

  முத்து   | Last Modified : 13 Jan, 2020 02:54 pm
sexual-crime-in-thanjavur

கும்பகோணத்திற்கு வேலை நிமித்தமாக வந்திருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை,  நள்ளிரவில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று 4 வாலிபர்கள் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர். கடந்த 2018ம் வருடம் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பாலியல் பலாத்காரம் செய்த நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு, டெல்லியில் இருந்து பதவி உயர்வுக்கான பயிற்சிக்காக 23 வயதான இளம்பெண் ஒருவர் கும்பகோணத்தில் உள்ள அலுவலகத்திற்கு ரயில் மூலம் வந்தார். டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் வந்திருந்த அந்த பெண், தமிழ் மொழி தெரியாததால், கையில் விலாசத்தை வைத்துக் கொண்டு, ஆட்டோ டிரைவரிடம் விலாசத்தைக் காட்டி, தன்னை அந்த முகவரிக்கு அழைத்துச் செல்லும் படி கேட்டார். ஆனால், ஆட்டோ ஓட்டுநர், தன்னை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்வதை அறிந்து கூச்சலிட்டார். இதையடுத்து, கும்பகோணம் செட்டி மண்டபம் பைபாஸ் சாலையில் ஆட்டோ ஓட்டுநர் இறக்கி விட்டு ஓடிவிட்டார்.

அப்போது அந்த வழியே வந்த வாலிபரிடம், தான் செல்ல வேண்டிய இடத்திற்கு வழி கேட்டார். இதையடுத்து, அந்த வாலிபரும், தான் சரியான முகவரிக்கு அழைத்துச் செல்வதாக கூறி, தனது நண்பர்களுக்கும் இது குறித்து செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். பின்னரும், நான்கு நண்பர்களும் சேர்ந்து, ஏற்கெனவே மாதவிடாய் வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை தொடர்ந்து 2 மணி நேரம் கதற கதற கற்பழித்துள்ளனர். பின்னர், இது குறித்து வெளியே சொன்னால், கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

பின்னர், இது குறித்து அந்தப் பெண், கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், கும்பகோணம் மோதிலால் தெருவைச் சேர்ந்த நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close