காங்கிரஸைத் தொடர்ந்து சிறுத்தைகளுக்குக் கல்தா! அப்செட்டில் திருமா!

  சாரா   | Last Modified : 17 Jan, 2020 04:50 pm
caa-congress-move

நாடு முழுவதும் எதிர்கட்சிகள் மட்டுமல்லாது மாணவர்களும் மக்களை திரட்டி குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. ஆனால் அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாத மத்திய அரசு, குடியுரிமை திருத்த சட்டம் கடந்த 10ம் தேதி முதல் அமலுக்கு வந்தாக கடந்த சில தினங்களுக்கு இந்திய அரசிதழில் வெளியிட்டது.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்தபோது, மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை திட்டமிட எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்து இருந்தார்.

                                                       


இந்நிலையில், டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் நடைப்பெற்ற சந்திப்பில், குடியுரிமை சட்டம் ப் பற்றி காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் திமுக  பங்கேற்காதது குறித்தும் கூட்டணி கட்சியினரிடையே அதிருப்தி எழுந்துள்ளது. சமீபத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் பற்றி திமுக அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்றும், வெற்றி பெற்றதும், காங்கிரஸ் கட்சியினருக்கு பதவி வழங்குவதிலும் திமுக பெருமளவில் அக்கறைக் காட்டவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் அழகிரி கருத்து தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனால், கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் எண்ணத்தில் இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. அப்படி காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால், கமலின் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது. திருமாவின், விடுதலை சிறுத்தைகளும், திமுக கூட்டணியில் இருந்து தற்போது ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவே புலம்பி வருகிறார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திருமா சம்மதிக்காத காரணத்தினால் தான் வைகோவை விட திருமாவை அதிக தூரத்தில் ஓரம்கட்டி வைத்திருக்கிறாராம் ஸ்டாலின்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close