போகி பண்டிகை கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன ?

  சாரா   | Last Modified : 13 Jan, 2020 09:42 pm
bhogi-spl-article

பொதுவாக பொங்கலை கொண்டாடும் தமிழர்கள், பொங்கலுக்கு முன்பாக வீட்டை சுத்தம் செய்து, தேவையில்லாத பழைய பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். அந்த பொருட்களை, பொங்கலுக்கு முதல் நாள் அன்று, அதாவது போகியின் போது, வீட்டின் முன்பாக வைத்து எரித்து விடுவார்கள். "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்றும், பழையன கழிதலும்,புதியன புகுதலும்' என்ற வகையிலும் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும், மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை "போகி'யன்று பூஜிக்கும் வழக்கமும் நடைமுறையில் இருந்தது.

அத்துடன், போகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகளை தீயிட்டு கொளுத்தி விடுவார்கள். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம். எது எவ்வாறானாலும், நமது சுற்றுப்புற சூழலுக்கு எந்த கெடுதியும் வராத அளவுக்கு, நம் சாத்திர சம்பிரதாயங்களை கடைப்பிடிப்போமேயானால், பண்டிகை என்பது ஆரோக்கியமானதாகவே இருக்கும். அதைவிட்டுவிட்டு, போகி என்ற பெயரில் டயரை கொளுத்துவது, பட்டாசுகள் வெடிப்பது போன்ற சூழலுக்கு ஒவ்வாத விஷயங்களை தவிர்ப்பது நல்லது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close