சென்னை டூ செங்குன்றம்! போதைப் பழக்கத்தால் செல்போன் பறிக்கும் சிறுவர்கள் கும்பல்!

  முத்து   | Last Modified : 14 Jan, 2020 06:57 am
teens-held-by-police-for-mobile-snatching

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 10ஆம் தேதி ராகேஷ் என்ற ஐ.டி. நிறுவன ஊழியரை 6 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியது. மேலும் அவரிடம் இருந்து செல்போனை அவர்கள் பறித்துச் சென்றனர். இது தொடர்பான புகாரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இதே கும்பல் தி.நகரிலும் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், அவர்களே டிக்டாக் வீடியோ வெளியிட்டு சிக்கிக் கொண்டுள்ளனர். அதன் மூலம் செல்போன் பறிப்புக் கொள்ளையர்களை அடையாளம் கண்ட காவல்துறை அவர்களை கைது செய்தது.

பிடிபட்ட 9 பேரும் சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்தவர்கள். 16 மற்றும் 17 வயது சிறுவர்களான இவர்கள், போதை மாத்திரைக்கு அடிமையானதால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். குழுவாகப் பிரியும் 9 பேரும் இருசக்கர வாகனத்தில் சென்று செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தி.நகரில் இருந்து செங்குன்றம் வரை செல்லும் இவர்கள் தொடர் வழிப்பறியில் ஈடுபடுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர். செல்போனை பறித்து கடைகளில் விற்கும் சிறுவர்கள் பெரும்பாலும் பணத்துக்கு பதில் போதை மாத்திரைகளையே பெற்றதாக சொல்லப்படுகிறது. சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்தது யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close