உஷார்!! கோலம் போடும் போது ஜாக்கிரதை! உங்களை சுற்றும் ஆபத்து!

  முத்து   | Last Modified : 18 Feb, 2020 09:30 pm
robbers-theft-chain-a-woman-from-front-her-house

புதுக்கோட்டையில் வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் 13 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட சார்லஸ்நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி மீனாள் (54). வழக்கம்போல அதிகாலை நேரத்தில் வீட்டு வாசலில் அவர் கோலமிட்டு கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், மீனாள் கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிட்டதை அடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்திருக்கின்றனர். எனினும் அதற்குள் கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதையடுத்து செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற திருக்கோகர்ணம் போலீஸார், அருகேயுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் யார் என விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோலமிட்ட பெண்மணியிடம் 13 சவரன் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close