காற்று மாசுவால் 70 லட்சம் குழந்தைகள் இறப்பு.. அதிர்ச்சி தகவல்

  முத்து   | Last Modified : 14 Jan, 2020 11:29 am
impact-of-air-pollution

காற்று மாசுவால் ஆண்டுக்கு 70 லட்சம் குழந்தைகள் குறைப் பிரசவத்தில் பிறந்து இறப்பதாக உலக சுகாதார நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்தகவலை தமிழ்நாடு மாசுக் காட்டுப்பாட்டு வாரிய (கோவை வடக்கு) உதவி செயற்பொறியாளா் பி.ரமேஷ் தெரிவித்துள்ளார். போகிப் பண்டிகையின்போது, எரிக்கப்படும் டயா், நெகிழிப் பைகளால் நச்சுத் தன்மை புகை வெளியேறி காற்று மாசு ஏற்படுகிறது. நச்சுக் காற்றை சுவாசிப்பதால் ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தவிர காற்று மாசுவால் ஆண்டுதோறும் 70 லட்சம் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்து இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு சென்னையில் போகிப் பண்டிகையின்போது, எரிக்கப்பட்ட பொருள்களால் வளிமண்டலத்தில் காற்று மாசு ஏற்பட்டு சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிரங்க முடியாத சூழல் ஏற்பட்டது. பனிக் காலத்தில் புகை வெளியேற முடியாமல் வளிமண்டலத்திலே சுற்றிக்கொண்டிருப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இதனைக் கட்டுப்படுத்த கடந்த 2019ஆம் ஆண்டு போகிப் பண்டிகையின்போது டயா், நெகழிப் பைகள் எரிப்பதை தடுக்க சென்னையில் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், போலீஸார் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு காற்று மாசு கட்டுப்படுத்தப்பட்டது. கோவையில் பெரிய அளவில் இந்த பாதிப்புகள் காணப்படுவதில்லை. ஆனாலும், பிளாஸ்டிக் பொருள்கள் எரிக்கப்படுகின்றன. இதனை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் பி.ரமேஷ் கூறினார். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close