சென்னை டூ செங்கல்பட்டுக்கு 15 நிமிடத்தில் செல்லலாம்..! வருகிறது பறக்கும் கால் டாக்சி

  முத்து   | Last Modified : 15 Jan, 2020 08:18 am
hyundai-announces-chennai-will-going-get-flying-taxi

இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயில், விமானப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து என புது புது வசதிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரிக்க இந்த வசதிகளும் பற்றாக்குறை ஆகிவிட்டது. இந்த சூழலில் பறக்கும் கார் 2020ஆம் ஆண்டு சர்வதேச விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதற்கு பெயர் கான்செப்ட் எஸ்-ஏ1 . இதன் மூலம் வான்வழி, தரைவழி போக்குவரத்து ஏரியல் ரைடு ஷேர் நெட்வொர்க் மூலம் வழங்கப்பட உள்ளது.

இந்த பறக்கும் கார் மணிக்கு 290 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். தொடர்ந்து 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யும். பேட்டரியால் இயங்கும் இந்த கார் தற்போது மனிதர்கள் மூலம் இயக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் தானாக இயங்க கூடிய வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்முறைக்கு வந்தால் சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு வெறும் 15 நிமிடத்தில் செல்ல முடியும். எனினும் இது எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close