1000 நாட்களில் 1000 பாடல்கள்.. உலக சாதனைப் படைத்த இந்தியப் பெண்!

  சாரா   | Last Modified : 15 Jan, 2020 12:40 pm
indian-woman-in-dubai-breaks-world-record

ஸ்வப்னா 1000 நாட்களில், 1000 பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடி பதிவு செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
உலக அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


திரையுலகில் ஆண்களுக்கு சரிசமமாக பெண்களும் தற்போது பணியாற்றி வருகின்றனர். எந்த விதத்திலும் ஆண்களை விட தாங்கள் குறைவானவர்கள் கிடையாது என்று சொல்லும் அளவிற்கு திரையுலகின் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். இந்நிலையில், துபாயில் வாழ்ந்து வரும் இந்திய பெண் ஸ்வப்னா ஆப்ரஹாம்  என்பவர் தற்போது ஒரு புதிய சாதனை படைத்துள்ளார்.

1000 நாட்களில், 1000 பாடல்களை எழுதி முடித்ததுடன், அவரே அந்தப் பாடல்களுக்கு முழுமையாக இசையமைத்து, பாடியும் உள்ளார். அந்தப் பாடல்களைப் பதிவு செய்து உலக சாதனையும் படைத்துள்ளார்.

கடந்த 2017, ஏப்ரல் மாதம் 8-ம் தேதி தனது  முதல் பாடலை பதிவு செய்ய துவங்கிய ஸ்வப்னா, தனது 1000வது பாடலை 2020 ஜனவரி 2ம் தேதி  நிறைவு செய்தார். இதனையடுத்து இவருக்கு  உலக அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஸ்வப்னாவுக்கு வயது 48 என்பது குறிப்பிடத்தக்கது. சாதிக்க வயது மட்டும் அல்ல, எதுவுமே தடையல்ல என்று நிரூபித்த ஸ்வப்னாவிற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close